மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Monday, December 13, 2010

ஆத்திசூடி

1.அறம் செய விரும்பு

  • நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்

  • கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல்

  • உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஓளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

  • ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5.உடையது விளம்பேல்

  • உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்

  • எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

  • கணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி

  • இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

  • யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

  • உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

  • நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

  • ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்

  • அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

0 comments:

Post a Comment