மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Monday, December 13, 2010

கும்பகோணம் கோவில்கள்

அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில்

இறைவன் : அருள்மிகு காசி விஸ்வநாதர்

இறைவி : அருள்மிகு விசாலாட்சி

தல விருட்சம் : வில்வம்

தலதீர்த்தம் : மகாமககுளம்


வாரார் கொங்கை மாதோர் பாக மாக வார்சடை
நீரார் கங்கை திங்கள் சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார் மழுவொன் றேந்தி யற்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத் தெண்டோள் எந்தை
காரா ணத்தாரே – திருஞானசம்பந்தர்


இராவணனை வெல்ல வேண்டுமெனில் உருத்திராட்சம் பெற வேண்டுமென்று ஸ்ரீஇராமபிரான் அதர்கான வழியை அகத்திய முனிவரிடம் வேண்ட, அதற்கு அகத்தியர் கும்பகோணத்தில் உள்ள காசி விஸ்வேஸ்வரரை வழிப்பட்டால் உருத்திராட்சம் பெறலாம் எனக் கூறினார். அதன்படி ஸ்ரீஇராமபிரான் கும்பகோணம் வந்து தங்கி காசி விஸ்வேஸ்வரரை வழிப்பட்டு உருத்திர அம்சம் பெற்றார் எனக் கூறுவர்


இக்கோவில் மகாமகக் குளத்தின் வடக்கரையில் அமைந்துள்ளது. மக்கள் பாவங்களை ஏற்றுக்கொண்ட கங்கை, யமுனை முதலிய நவக்கன்னியர்கள் தங்கள் பாவங்களை போக்க இறைவனை வேண்ட இறைவன் மகாமக நாளன்று மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்யச் செய்து பாவங்களைப் போக்கியருளினார். எனவே நவகன்னியர்; சந்நிதியும் இக்கோவிலில் தென்முகமாக உள்ளது. நவக்கன்னியரை பெண்கள் வழிப்பட்டால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.


சிறப்புச்செய்தி
கும்பகோணத்தில் வீரபத்திர சுவாமி திருக்கோவிலும் மடமும் மகாமகக் குளத்திற்கண்மையில் உள்ளன. சுமார் 4 அடி உயரத்தில் இறைவனை வணங்கும் கோலத்தில் ஒட்டக்கூத்தரின் சிலை வழிப்பாட்டிலுள்ளது.


இது மிக எழில் வாய்ந்த கி.பி.12ம் நுற்றாண்டுக் கற்படிமமாகும். வீர சைவம் மற்றும் சாத்த அடிப்படையில் தோன்றிய இம்மடம் சோழர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. சிற்ப அமைதி வழிபாட்டு நெறி மற்றும் தொன்மையின் எச்சங்களாளும் இச்சிலையை ஒட்டக்கூத்தருடைய படிமம் எற்றுக் கொள்ள முடியும்.
- குடவாயில் பாலசுப்பிரமணியன்ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் கோவில்

இறைவன் : அருள்மிகு திகும்பேஸ்வரா

இறைவி : அருள்மிகு ஸ்ரீமங்களாம்பிகை

தல விருட்சம் : வன்னி மரம்

தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்


அரவிரி கோடனி டலணிகாவேரி யாற்றயலே
மரவிரிபோது மௌவல் மணமல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலை சூழ்ந்த குழகன்குட மூக்கிடம்
இரவிரி திங்கள் சூடியிருந்தா னெம்மிறையே
- திருஞானசம்பந்தர்


மணியாடுபாவை எனப்படும் கும்பகோணம் நகரின் நடுநிலையாக விளங்குகிறது இத்திருக்கோவில். குலம் கணிக்க முடியாத மிகப்பழைமையான திருக்கோவில் நான்கு இராசகோபுரங்களுடன் கம்பீரமாக விளங்கும் இத்திருக்கோவிலில் அருள்மிகு ஆதிக்கும்பேசரும், அருள்மிகு மங்களாம்பிகையும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.ஆதிகும்பேசர்
இத்தலம் மகாபிரளயத்திற்கு பின் உலகில் தோன்றிய முதல் தலமாகும். ஊலக உயிhகளின் தோற்றத்திற்கு ஆதி மூலமாகிய இத்தலத்தில் அமுத கும்பத்தில் இருந்து இறவைர் தோன்றியதால் ஆதிகும்பேசர் என்றும் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகிறார். திருஞானசம்பந்தர் தமது பதிகத்தில் இவ்விறைவனை குழகன் என்று பாடுகிறார்.


மகாபிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த பிரம்ம தேவரின் சிருஷ்டி பீஜ அமிர்த குடந்தைக் கிராதமூர்த்தியாக (வேட உருவில்) உருவமெடுத்து வந்த சிவபெருமான் அம்பெய்து குடத்தின் மூக்கை எடைத்தார். எனவே இத்தலத்திற்கு குடமூக்கு என்று பெயர் உண்டாயிற்று. குடம் எடைத்தும் மண்ணில் பரவிய அமிர்தத்தால் மண்ணைக் குழைந்து ஒரு இலிங்கத்தை தமது கையாலேயே சிருஷ்டித்தார் சிவபெருமான். பின் அந்த இலிங்கத்துக்குள் உறைந்து சுயம்ப வடிவமானார். ஆவர் தான் இன்று நாம் வணங்கும் கும்பேஸ்வரர்.

சிந்திய அமிர்தம் வழிந்தோட அந்த இடத்திலே தான் மகாமகக்குளம் இருக்கிறது. ஆதாலால் தான் இங்கே பெருகும் தீர்த்தம் மாபெரும் பெருமை கொண்டுள்ளது.

ஸ்ரீமங்களாம்பிகை


காமகிரி பீடம், ஜாலத்திர பீடம், உட்டியாண பீடம், பூரணகிரி பிடம், என நான்கு பீடங்களையும் ஒன்று சேர்த்து பீடத்தில் எழுந்தருளி மந்திரபீடேஸ்வரியாக அருள்புரிகிறார். ஸ்ரீமங்காளம்பாள்.

முற்ற தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவத்தை மட்டும் கொண்டிருக்க மங்களாம்பிரகயின் உடற்பாகம் உச்சி முதல் பாதம் வரை 51 சக்தி வடிவ பாகங்களாக அமைற்துள்ளது. அதாவது 51 பீஜாட்சரங்களில் தோன்றி 72000 மந்திரங்கள் கொண்ட பீடத்தில் வீற்றிருக்கிறாள் அம்பாள்.

அன்னை மங்களாம்பிகை சந்தியின் எதிரில் ரிஷபம் அமைந்துள்ளது. ஏனெனில் அம்பாளின் அமைப்பு திருதியாவரணம் ஆகும். தம்மை வணங்கும் அடியாருக்கு மங்களத்தை அள்ளித் தரும் வள்ளல் மங்களநாயகியாவாள்.

ஆதி விநாயகர்:


இறைவனும் இறைவியும்இத்தலத்திற்கு ையரிந்துஆதியிலேயேஇத்தலம் வந்து இறைவன் இறைவியை எதிர்நோக்கி காத்திருந்தார் விநாயகர். எனவே இத்தல விநாயகர் ஆதி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.


முருகன்


சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் முரகன் ஆறுமுகங்களுடன் எழுந்தருளி இறைவன் இநைவியை வணங்கியதால் இத்தலத்தில் ஆறுமுகன் எனப் பெயர் கொண்டார். ஆறுமுகம், ஆறு திருக்கரங்களும் உடைய திருவுருவக் காட்சி இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மேற்புரத்தில் அமைந்துள்ளது. உலகில் வேறு எங்கும் இது போன்று திருமேனியமைப்பு இல்லாத தனிச் சிறப்பாக விளங்குகிறது. இவர் அருணகிரிநாதரால் பாடப்பெற்றவர்.

கும்பமுனிவர்


வெளிப்பிரகாரத்தில் மேற்கு மூலையில் ஜீவ சமாதியாக அருள்புரிந்து வருகிறார் கும்பமுனிவர். ஆதிசித்தர்களாக போற்றப்படம் 64 பேரில் முதன்மையானவர் அருள்மிகு கும்பமுனி சித்தர். குயிலையில் சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் காண அனைவரும் கூடிவிட பாரம் தாங்காது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து நிலமகள் சமநிலை மாறுபபட்டது. சுமன் செய்ய வல்லவர் கும்பமனிவரே என உணர்ந்து அவரை பொதிய மலைக்கு செல்லுமாறு கூறி அருள கும்பமுனிவரும் தென்திசை செல்லும் இவ்வாலயத்தில் தங்கியிருந்தார்.


அப்போது அராவணணை வெல்ல ஸ்ரீஇராமருக்கு ஈசனிடமிருந்து உத்திராச்சம் பெறுவதர்கான வழிமுறைகளைக் கூறிப்பின் பொதிய மலைச்சாரல் அடைந்து பல ஆண்டுகள் யோகத்தில் ஆழ்ந்து பரம்பெருளைத் தியானித்தார். பின் ஜீவசமாதியடைவதர்கான காலம் நெருங்க கும்பகோணம் வந்தடைந்து கும்பேஸ்வரர் மங்களாம்பிகையை வணங்கி வெளிப்பிரகார தென்மேற்கு மூலையில் கிழக்கு முகமாக ஜீவசமாதிஜயடைந்தார். இவரது ஜீவசமாதி ஜீவ துடிப்புடன் அருள் பொழிய அலை இயக்கமாக பரவியுள்ளது.

மொட்டை கோபுரம்


மதுரை மினாட்சியம்மன் கோவிலில் வடக்குப்புற கோபுரம் விமானமின்றி மொட்டையாக இருக்கும். எனவே மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அதுப்போலவே இக்கோவிலின் தென்புற வாயிலில் கோபுரமின்றி மொட்டையாக இருப்பதால் மொட்டைக் கோபுர வாசல் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் யானை:


ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி மாக பெரியவரின் முயற்சியால் 1980 ஆம் ஆண்டு 6வயதுடைய யானைக் குட்டி ஓன்றை பீகார் மாநிலத்திலிருந்து வரவழைத்து இக்கோவிலுக்கு அளித்துள்ளார். இப்போது 30 வயதை அடைந்துள்ள இக்கோவில் யானையின் பெயர் இத்தல அம்மாளின் பெயரான மங்களாம்பாள் ஆகும்.

கல் நாதஸ்வரர்:
மிகப்புராதனமான கருங்கல்லால் செய்யப்பட்ட நாதஸ்வரம் ஒன்று பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

மகாமகம்:


மகாமகம் இக்கோவிலின் சார்பிலேயே கொண்டாடப்படுகிறது.


அருள்மிகு காளஹஸ்வரர்

இறைவன் : காளஹஸ்தீஸ்வரர்

இறைவி : ஞானாம்பிகை

தலவிருட்சம் : வில்வம்


காவேரிக்கு தென்புறம் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளுகாக தஞசையை ஆண்ட சரபோஜி மன்னனால் இத்திருக்கோவில் நிறுவப்பெற்றது. இத்தலத்தில் உள்ள ஞானாம்பிகையை வழிப்பட்டால் வாயுலிங்க ச்திரமான காளஹஸ்தி வழிப்பட்ட பலன் கிடைக்கும்.


இத்திருக்கோவில் கார்த்தியாயினி சமேத கல்யாண சுந்திரமூர்த்தி சன்னிதி தனிச்சிறப்புடன் விளங்கி வருகிறது.

இத்திருக்கோவில் அஷ்ட தசமபுஜமகா துர்க்கைக்கு தனி சன்னிதி இருக்கிறது. இங்கு பழமையான ஜூரஹரேஸ்வர சுவாமி சன்னிதி உள்ளது. விடாது ஜூரம் குறைவாக அடித்தாலும் மிகக் கடுமையாண ஜூரம் இறைவாக இருந்தாலும் சுர்மிக்க வெந்நிரால் அபிஷேகம் செய்து புழங்கள் அரிசி சாதம் மிளகு ரசம், பருப்பு துவையல் நிவேதனம் செய்து வில்வ அர்ச்சனை செய்து விபூதி பிரசாதத்தை சாப்பிட்டால் ஜூரம் இறைந்துவிடும். இந்த ஆலயத்தில் ஆராய்ச்சி மணியை அடித்தால் ஓம் என்ற ஓசை கேட்கும்.அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்அவசியம் காணவேண்டிய அற்புதமான கோயில் இது. காரணம் கொயில் மட்டும்மல்ல ஒரு சிறந்த கலைக்கூடமும் ஆகும். இக்கோயில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த ரெகுநாத நாயக்க மன்னரால் கி.பி.1620 ம் ஆண்டு கட்டப்பெற்றது.

முன் மண்டபம் 62 தூண்களுடன் சிற்ப வேலைப்பாட்டுடன் உள்ளது. பெருமாளின் பல்வேறு அவதாரங்களும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மகா மண்டபம் என்று பெயர். கோயிலின் உள் பிரகாரத்தில் இராமயணம் முழுவதும் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. சுமார் 200க்கு மேற்பட்ட சித்திரங்கள் வரயப்பட்டு சித்திரகூடம் சிறக்கிறது.


இக்கோயிலின் உற்சவமூர்த்திகள் மிகப் பழங்காலத்தவை. அவை தாராசுரத்தில் புதையுண்டு இருந்ததாகவும் கி.பி.16ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட அச்சுதப்பெருமாள் தோன்றி அச்சிலைகளை எடுத்து பிரதிஷ்டை செய்து தனக்கு கோயில் அமைக்குமாறு கூரியதாக வரலாறு கூறுகிறது.

சுவாமியின் கருவறை பழைய முறைப்படி அமைந்துள்ளது. ஸ்ரீ இராமபிரானும் அன்னை சீதாதேவியும் ஒரே ஆசனத்தில் அமர்ந்துள்ளனர். பரதர் குடைபிடிக்க


சத்ருக்குனர் சாமரம் வீச இலக்குமணர் வில்லேந்திய வண்ணம் இராமர் கட்டளையை எதிபார்த்து. நிற்பது போன்ற பட்டாபிஷேக காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

மேலும் கையில் வீணையுடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் இராமாயண பாராயணம் செய்வது போன்ற திருமேனி ஒரு தனியழகு. இக்கோயிலின் பெருமாள் கோதண்டபாணியாக உள்ளார். கலை வண்ணமும் அருள் வெள்ளமும் சேர்த்து அள்ளித்தரும் இக்கோயிலில் ஸ்ரீ இராமநவமி, கோகுலாஷ்டமி நவராத்திரி காலங்களில் பத்துநாட்கள் பெரிய விழாவாக நடைபெறும்.


சிற்பச்செய்தி

தஞ்சை நாயக்கர்களின் வரிசையில் மிகச் சிறப்பித்துக் கூறப்படும் தகுதியைப் பெற்றவன் இரகுனாத நாயக்கனாவான். அச்சுப்ப நாய்க்கன் - மூர்த்திமாம்பிகா தம்பதிகளுக்கு இராமனது அருளால் இரகுநாதன் பிறந்ததாக இரகுனாத நாயக்காப்புதயம் எனும் நூல் கூறுகிறது. சிறுவயதிலிருந்து கோவிந்த தீட்சிதரிடம் கல்வி பயின்று அச்சுதப்ப நாயக்களின் ஆளுகையின் போதே இளவரசனாகப் பணியேற்றவன். கி.பி.1600 முதல் 1634 வரையில் தஞ்சை அரசனாகத் திகழ்ந்தவன். இவனது திறமையை மெச்சி அபிநவ போஜன் என்று விஜயவிலாசம் புக்ழ்சிறது.


இசையில் மாமேதையாகத் திகழ்ந்த இம்மன்னனின் தானே இரகுநாதேந்திரவீணை என்ற ஒரு வீணையையும் ஜெயந்தசேனா என்ற ஒர் இரகத்தையும் "இராமானந்தா"
என்ற ஒரு தாளத்தையும் கண்டுபிட்த்தான் என்பதைச் சங்கீத சுதா என்ற நூலின் மூலம் அற்ய முடிகிறது.

யாழ்ப்பாணம் வரை படையெடுத்துச் சென்று போர்த்துக்கீசியர்களின் கடற்படைத் தோற்கடித்தது ம்தலியன இவனது மற்றப் போர்க்களச் சாதனைகளாகும். உஷாபரிணயம் எனும் நூல் இவனது


பட்ட்த்தரசியின் பெயர் கலாவதி என்றும் இவனது மற்றொரு தேவியின் பெயர் செஞ்சுலெட்சுமாம்மா என்றும் கூறுகிறது.

சிற்பக்கலைக்கு இராகுநாதன் செய்து தொண்டு மிகப்பலவாகும். கும்பகோணம் இராமசமிக்கோயில் திருக்கண்ணம்ங்கைத் திருக்கோயில், மன்னார்குடி இராசகோபாலசுவாமிக் கோயில் முதலிய இடங்களில் உள்ள படைப்புகள் மிக உயரிய கலைச்செறிவுடையவை. "அநவீரத இராம காதம்ருத சேவகன்" என தன்னைக் கூரிக்கொண்ட இம்மன்னன் இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு திகழ்ந்ததால் குடந்தை இராமசாமிக் கோயிலில் இராமாயணச் சிற்ப மண்டபத்தைப் படைத்தான். இது சோழநாட்டுக் கலைக் கூடங்களிலேயே தலையாய இடம்பெறத்தக்க ஒன்று.


ஆதிவராகப் பெருமாள்

மூலவர், உற்சவர் : ஸ்ரீ ஆதிவராகர்

தாயர் : ஸ்ரீ அம்புஜவல்லித் தாயர்

தீர்த்தம் : வராக தீர்த்தம்

மற்ற சன்னதிகள் : க்ருடன், ஸ்ரீ விஷக்சேஸனர்.

ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர்

பூஜாவிதி : ஸ்ரீ பாஞ்சராத்ரம்

கோலமலர்ப் பாவைக் கன்பாகிய வெண்ணன்பேயோ
நீலவரையிரண்டுபிறை கல்வி நிமிர்ந்த தொப்பக்
கோல வராக மென்றாய் நிலங்கோட்டிடைக் கொண்ட வெந்தாய்
நீலக்கடல் கடைந்தாயுன்னைப் பெற்றினும் போக்குவனோ
- நம்மாழவர்


ஸ்ரீ லக்ஷ்மியம்தியான பகவான் வைகுண்டத்தில் எழுந்தருளியிருக்கும் காலத்தில் ஸனகாதி யோகிகள் பகவான் தரிசிக்கும் பொருட்டு வைகுண்ட லோகத்திற்கு வந்தனர். அப்பொழுது அங்கு துவாரபாலகர்களாக இருந்த ஜெயன், விஜயன் என்னும் இருவரும் பகவானை தரிசிக்கும் காலம் இதுவல்ல என்று கூறி தடுத்தனர். அந்த சமத்தில் வைகுண்ட வாயிலை திறந்து கொண்டு ஸ்ரீ மந் நாராயணன் யோகிகளுக்கு தரிஸ்னம் அளிக்க எழுந்தருளினார். யோகிகள் மிகவும் மகிழ்ந்து பகவானை நமஸ்கரித்து பூஜித்தனர். பிறகு அவர்கள் பகவானை தரிசிக்க தடையாக இருந்த துவாரபாலகள் பகவானிடம் சாபத்தை போக்கி வழி செய்யுமாறு வேண்டினார். அப்பொழுது பகவான் அவர்களை சமாதானம் செய்து பூமியில் அரக்கர்களாகப் பிறந்து என் கையினாலேயே சாப விமோசனம் பெற்று என்னை திரும்பவும் வந்து அடைவீர்களாக என்று அருளினார். அதன்படி அவர்களுக்கு ஹிரன்யாக்ஷன், ஹிரன்யகசிபு என்ற அரக்கர்களாகப் பிறந்தனர். ஹிரன்யாக்ஷன் தவஸ் செய்து வரம் பெற்ரு பூமியை பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டான. அப்பொழுது பிரம்மாத் தேவர்கள் அனைவரும் செய்வதறியது திகைத்து வைகுண்ட செண்ரு பகவானை சரணடைந்து பிரார்த்தித்தனர். பகவானும் அவர்களுக்கு அபயம் அளித்து வராக (பன்றி) அவதாரம் எடுத்து பாதாளத்திற்கு சென்ரு அந்த அசுரனை சமஹாரம செய்து பூபியை மீட்டு பூமிதேவியாகிய அம்புஜவல்லியை தனது இடது துடையில் வைதிக்கொண்டு மாசி மாதம் பெளர்ணமியுடன் கூடிய மஹ நக்ஷத்திரத்தில் மஹா புண்ணியதீர்த்தமான வராகக் குளக்கரையில் பாதாளத்திலிருந்து மேலே தொன்ரினார் என்று பவிஷ்யோத்ர ஏழாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

உலகில் முதலில் தோன்றிய இடம் ஸ்ரீ வராகபுரி என்னும் கும்பகோணம் க்ஷேத்திரம் ஆகும். ஸ்ரீ வராகப்புரியே பிறகு கும்பகோணம் என்றும் பாஸ்கரக் க்ஷேத்திரம் என்றும் வழங்கப்படவாயிற்று. இக்க்ஷேத்திரதில் முதலில் இந்த பகவானை வழிபடட பிறகே அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும்.

ஸ்ரீ வராகக் குளம்

ஸ்ரீ வர்ராக்குளம் மிகவும் புண்ணியம் வாய்ந்த தீர்த்தமாகும். இதில் குளத்து ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் வழிபாட்டால் நம் மனத்தில் நினத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். மேலும் தீராத வியாதிகள் அனைத்தும் தீறும் என்பது பவிஷ்யோத்ர புராணத்தில் கூறப்படுகிறது.

பலன்

ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நெய்விளக்கேற்றி சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து அன்னதானம் செய்து இப்பகவானை வழிபட்டால் கணவன் மனைவிகள் ஒன்று சேர்வர் மற்றும் விரும்பிய வரனை அடைவர்.

புதன் சனிக்கிழமைகளில் நெய் விளக்கேற்றி முக்தாசூர்ணம் (கோரைக்கிழங்கு பொடி) நிவேதனம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர்.அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்

இறைவன் : அருள்மிகு அபிமுகேசர்

இறைவி : அருள்மிகு ஆமிர்தவல்லி

தல விருட்சம் : தென்னை மரம்


இத்தலத்து இலிங்கம் அபிமுகேசர் என்றும் நாளிகேரேசர் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.

அபிமுகம் - நேர்முகம்


நவக்கிரகங்களில் நீராடி பாவங்களை போக்கி மக்களால் ஏற்பட்ட பாவங்களைப் போக்க மகாமக குளத்டில் நீராடவந்த நவ கன்னியர்கள் தரிசிப்பத்ற்கு ஏற்ற வகையில் கிழக்கு நோக்கியிருந்த இறைவன், நவகன்னியார்கு நேர்முகமாக மேற்கு நோக்கி திரும்பினதால் அபிமுகேசர் என்னும் திருப்பெயர் உண்டாய்ற்று.

நாளிகேரேசர்
நாளிகேரம் - தேங்காய்


ABIMUGESWARAR

வேட உருவத்தில் வந்த சிவபெருமான் அமுத குடந்தை உடைத்தஃபொழுது கும்பத்திலிருத்து தேங்காய் ஒரிடத்தில் விழுந்து, அததேங்காய் விழுந்த இடத்தில் ஒர் தென்னை மரமும், அதனடியில் ஒரு லிங்கம் எழுந்தது. நாளிகேரம் தேங்காய் விழுந்த இடம் நாளிகேரேச்சுரம் என்றும் சிவலிங்கம் நாளிகேரேசர் என்றும் அழைக்கப்படுகிறது.

குடந்தை திருக்கோயில்களிலேயே மிகவும் குறிப்பிடத்தக்க ஸ்தலம் இதுவாகும். இத்தல மிகத்துவம் அளவிடமுடியாதது. இதை விளக்க முன்னொரு காலத்தில் காஷ்மீர் தேசத்தில் சுதபன் என்ற அந்தணரும் அவர் மனைவி சீலவதியும் இவர்களுக்கு ஒரு அழகான மகள் சுமதி என்போரும் இருந்தனர்.


சுமதி திருமணப் பருவம் அடைந்தபோது ஊழில்வினையினால் தொழுநோய் உண்டானது. பார்போர் வெறுக்க பெற்றோர் மனம் வெதும்பியது.


ABIMUGESWARAR

வினையறுத்துபலன் தரும் சிவனை நோக்கி சுமதியின் பெற்றோர் கடுந்தவம் புரிய அங்க நாரதர் தோன்றி "உங்கள் மகளின் நோய் தவம் செய்வதால் நீங்காது. நீங்கள் மூவரும் வினையறுக்கும் தலமாம் கும்பகோணம் சென்று அங்குள்ள மகாமகம் குளத்தில் மாசி மகத்தில் மகதீர்த்தம் நீராடிஅபிமுகேஸ்வரை வணங்கினால் மட்டுமே தொழுநோய் நீங்கும்" எனக் கூறி மரைய அம்முவரும் அவ்வாறே கும்பகோணம் வந்து அபிமுகேஸ்வரை வணங்கினர். அன்று இரவு சுத்பன் கனவில் தோன்றிய இறைவன் "வேதியரே உம் மகளின் நோய் எம் அருளால் முற்றிலும் நீங்கியது. இவளுக்கு நம் முன்னிலையில் மணமுடித்து சிலகாலம் வாழ்ந்து எம் உலகம் அடைவாய்."அருள்மிகு கம்பட்ட விஸ்வநாதர் கோவில்

இறைவன் : கம்பட்ட விஸ்வநாதர்

இறைவி : அம்மை ஆனந்தவல்லி

தல விருட்சம் : வில்வம்

தீர்த்தம் : வருண தீர்த்தம்முன்பொரு காலத்தில் இத்தலம் இருந்த இடம் வனமாக (காடு) இருந்தது. இதற்கு மாலதிவனம் என்று பெயர். அப்போது உதயகிரி என்ற ஊரி;ல் தூமகேது என்பவர் சிவனிடம் பக்தி கொண்டு முனிவராகி வாழ்ந்து வந்தார். ஒருநாள் முக்திக்குறிய தலம் எது என பெரியோரிடம் விசாரிக்க கும்பகோணம் எனக் கூறினார். உடனே சீடருடன் கும்பகோணம் வந்தடைந்தார் தூமகேது.

மகாமக குளத்தில் நீராடி,ஆதி கும்பேஸ்வரரை வழிப்பட்டு பின் தென்மேற்கில் சிறிது துரம் செல்ல அங்கு மாலதிவனம் இருக்கக் கண்டார். இவ்வனத்தின் உள்ளே தூமகேது செல்ல, அங்கே ஒரு சிவலிங்கத்தைக் கண்டார். ஊள்ளம் உருக கண்ணீர் மல்கி பூசை செய்ய எண்ணினார். நீராட இடம் தேட வருண தீர்த்தம் இருந்தது. இவ்வாறு பல நாள் செல்ல, ஒருநாள் ரிஷப வாகனத்தில் அம்மையப்பனான காட்சி தந்த என்ன வரம் வேண்டும் கேள் என்றார் சிவபெருமான்.


சுpறந்த முனிவரான தூமகேது 'ஐயனே, உலகை காக்கும் ஈசனே' எனக்கெது வேண்டும். நீங்கள் சிவலிங்கமாக இவ்விடத்தில் அமர்ந்திருந்த காரணத்தால் விசுவநாதர் எனப் பெயர் கொண்டும் வணங்குவோர்கெல்லாம் ஆனந்தம் தரும் அம்மை ஆனந்தவல்லி என்றும் பெயர் கொள்ள வேண்டும். நூன் புதுப்பித்த வருண தீர்த்தம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும் என வேண்ட அவ்வாறே ஆகும் என்ற அருளினார் இறைவன்.

கம்பட்டம் என்ற சொல்லுக்கு சோழர்கள் காலத்தில் கங்க சாலை என்று அர்த்தம். சோழர்கள் தஞ்சையை தலைநகராக கொண்டு ஆண்டபோது இங்கு தங்க நாணயம் அச்சடித்தனர். எனவே தங்க சாலையில் அதாவது கம்பட்டத்தில் எழுந்தருளியுள்ள விசுவநாதர் கம்பட்ட விசுவநாதர் எனப் பெயர் பெற்றார்.


மூலவர் : அருள்மிகு சார்ங்கபாணி

தாயார் : அருள்மிகு கோமளவல்லித்தாயார்

தீர்த்தம் : பொற்றாமறை தீர்த்தம்

ஒம்நமோ நாராயணாய நமஹ

கறுடனின் மீதேறி விரைந்து வந்து நம்மையெல்லாம் காக்கும் மாயவன், கள்ளமாய் சிரித்து மனதை கொள்ளை கொள்ளும் தூயவன், திருமாலின் திருக்கோலான சார்ங்க பாணி சுவாமி கோயில் பொற்றாமறைக் குளத்தின் கிழக்கே அமந்துள்ளது. 12 ஆழ்வார்களில் 7 ஆழ்வார்களால் பாடல் கொண்டது இத்தலம்.


ஐந்து தலை நாகத்தின் மாது அனந்தசயனத்தில் இருந்தவாறு அருள்பாலிக்கின்றார் சார்ங்கபாணி ஸ்வாமி. கருவர்றையின் இருபுறங்களிலும் உத்ராயணவாசல், தட்சணயன வாசல் பெருயதாக உயர்ந்து நிற்கிறது.

வைணவ த்வ்ய ஷேத்ரங்களில் கும்பகோணம் 3வதாகவும், வைணவ சம்பிரதாயத்தின் முன்று திருமுற்றங்களில் துணிலா தூணில முற்றும் என்று பெருமையும் கொண்டது.


இத்தல வரலாறு என்னவெனில் ஏம முனிவர் என்பவர் ம்காமேரு மலையில் திருமாலை நோக்கி கடுந்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்து திருமால் ப்ரசன்னமாகி "வேண்டியது கேள்" என்றார். "எனக்கு முத்தியளிக்க வேண்டும் பிரபுவே" எனக் கேட்க திருமாலும் "ஏம முனிவரே உமக்கு இங்கு முக்தி கிடக்காது. முக்த்யைத் தரும் தலமான கும்பகோணம் சென்று அமுதவாவியின் வடகறையில் தவம் செய்தல் யம் அங்கு தோன்றி முக்தி தருவோம்" எனக் கூறி மறைந்தார்.


ஏம முனிவரும் கும்பகோணம் வந்து ஒரு நாள் நீராடுவதற்கு அமுதவாவியில் கால் வைக்க அதிசயத்தில் அப்படியே நின்றுவிட்டார். காரணம் குளத்தில் ஒரு பெண் தாமரையும் அதில் ஒரு பெண் குழந்தையும் இருந்ததுதான். உடனே பெண் குழந்தையைஎடுத்து வந்து கோமளவல்லி எனப் பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்க்கலானார். கோமளவல்லியும் வளர வளர திருமாலின் மீது மையல் கொண்டு கடுந்தவம் புரிய அப்பெண் குழந்தை தாயார் லெஷ்மி தேவியை தான் என்பது ஏம மினிவரும் புரிந்து போயிற்று. மணப்பருவம் வந்ததும் திருமாலே அங்கு எழுந்தருளினார்.கோமளவல்லியை மனம் புரிந்தது. ஏம முனிவருக்கும் முக்தி அளித்தார்.


இன்று தை மாத ஆறாம் நாள் சுவாமிக்கு திருமண உற்ச்சவம் நடைபபெறுகிது. இதில் மாலை மாற்ரு உற்சவம் நிகவும் விஷேசமான ஒன்றாகும்.

திருக்குடந்தை சார்ங்கபாணித் திருக்கோயிலில் முதல் திருச்சுற்று மண்டபத்தில் கருவறைக்கு நேர் பின்புறம் இம்மன்னவனின் உருவச்சிலை கொற்கையில் உள்ளது போன்ற உள்ளது. இத்திருக்கோயிலின் கருவறை மூன்றாம் குலோத்டுங்கனால் தேர் அமைப்பில் கட்டப்பட்ட ஒன்று என்படைக் கல்வெட்டு மற்றும்


ச்ற்ப இயல் வல்லுனர்ககள் குறித்துள்ளனர். இன்று இக்கோயிலில் காணும் அனைத்தும் சிற்பங்களும் இம்மன்னவன் காலத்டிய கலைப்பணியே. ஆனால் இன்று இம்மன்னவனின் உருவச்சிலைக்கு ஒரு வைணவ அட்ய்யாரின் பெயரிட்டு திருமண சாத்தி வழிபாடு நடத்துகின்றனர்.


இறைவன் : அருள்மிகு சிவகுருநாத சுவாமி

இறைவி : ஆர்யாம்பாள்

தலதீர்த்தம் : வராகதீர்த்தம்

ஸ்ரீ ஆதிசாங்கரர் கேரளாவில் காலடி என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால் அவரது மூதாதையர் யார் தெரியுமா அவர்கள் கும்பாகோணதிற்கு அருகேயுள்ள சிவபுரத்தை சேர்ந்தாவார்கள். சிவபுராத்திலிருந்து கேரளாவிற்குச் சென்று குடியேறியவர்கள் சிவனின் பெயராலேயே புரம் என்று அழக்கப்படும் இவ்வூர் குபேரபுரம், பூ கைலாயம். சண்பகாரண்யம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.


ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அங்கப்பிரதடசணம் செய்து வழிபட்ட தலம். பட்டினத்தார், அருணகிரினநாதர் ஆகியோர் தரிசித்து பேரு பெற்றுள்ளத் தலம்.

மேலும் பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தலம் குழந்தைப்பேறும் வழக்குகளில் வெற்றியும் தரும் ஸ்தலமாகும்.
புராணச் சிறப்பு
இரண்யாஷன் என்ற அசுரன் இந்த உலகத்தை அழிக்க முயன்றான். அப்போது ஜகத்ரட்சகனான திருமால் வெண்பன்றி உருவெடுத்து தன் கொம்பின் முனையில் உலகத்தை தூக்கி நிறுத்திக் காப்பற்றினார். பின் இத்தலம் வந்து சிவபுரநாதரை வழிபட்டு அருள் பெற்றார்.


ABIMUGESWARAR

திருமால் வராகமூர்த்தியாக அவதாரமெடுத்த போது அவர் மேனியில் பட்ட மண் துகள்களை ஒன்று திரட்டி இத்தலத்தில் சிவலிங்கமாக்கி வழிப்பட்டாள் திருமகள்.

குபேரனாக்கிய சிவபுரம்
ஒரு சமயம் செருக்கோடு கைலாயம் வந்த இராவணனைத் தடுத்தார் நந்திதேவர் குபேரன் இரவணனுக்கு பரிந்துபேச, நந்தி தேவரின் சாபத்திற்க்கு ஆளானான் குபேரன். ஆகவே இத்தலத்தின் தனபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாகப் பிறந்து இறைவனை வழிப்பட்டு வந்தான். ஒருநாள் வடக்கு பிரகாரத்தில் ஒரு செப்புபட்டயம் கிடந்தது. அதில் மாசி மாதம் மகாசிவராத்திரி சோமவார பிரதோஷத்தில் வடு இல்லாத ஆண் குழந்தை ஒன்றை இருபுரமும் தாய் தந்தையார் பிடித்து நிற்க வாள் கொண்டு அறுத்து வெளிவரும் இரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று வடமொழி சுலோகத்தால் எழுதப்கபட்டிருந்தது.


அதன் படியே வறுமையில் வாடிய ஒரு அந்தண தம்பதியர் பொருளுக்காக இதற்கு சம்மதிக்க தனபதி வள் கொண்டு அறிந்தான். அப்போது குழந்தை அன்னை சிங்காரவல்லியை நினைத்து வேண்ட அம்பிகை இறைவனிடம் வேண்டினாள். தனபதியின் சாபம் போக்கிவிடவே இவ்வாறு செய்தோம் என அருளிய எம்பெருமான் தனகபதியை குபேரனாக்கினார். தம்பதிய்ராக இந்திரன், இந்திராணி, அக்கினிதேவன் ஆகிய மூவரும் சிவலிங்கத்தைத் தங்கி நிற்பதாகக் கூறுவர். பெருமானின் திருமுடியில் இரத்தத்துளி இருப்பதை இன்றும் காணலாம்.

இத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம் இதனாலேயே ஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அங்கப்பிரதட்சணம் செய்தே சிவபெருமானை தரிசித்து பின் ஊர் எல்லைக்கு அப்பால் இருந்த படியே பாடியதாக வரலாறு அவ்வாறு அவர்கள் பாடிய இடம் இன்று சுவாமிகள் துறையென அழைக்கப்படுகிறது.


ABIMUGESWARAR

ஆலமர விநாயகர்
சிவபுரமருகில் ஒரு மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அதில் அடிப்பகுதியில் குகை போன்ற அமைப்பு உள்ளது. அதனுள் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். ஆலமரத்தினுள் நுழைந்து சென்று விநாயகரை தரிசிப்பது வேறு எங்கும் இல்லாத அதிசய்மாகும்.

பட்டினத்தார்
பட்டினத்தாரின் தமக்கையார் வீடு சிவபுரத்தில் உள்ளது. அக்காலத்தில் பட்டினத்தார் படிக்கொணடே இவ்வூருக்கு வர அதை இழிவாக எண்ணிய தமக்கையார் அப்பம் செய்து அதில் விஷத்தைக் கலந்து பட்டினத்தாருக்கு அன்போடு கொடுப்பது போல் கொடுக்க ஞான திருஷ்டியால் கபடம் அரிந்த பட்டினத்தார் அப்பத்தை தமக்கையாரின் ஓட்டின் மேல் எறிந்து பற்றி எரிகவே என்று பாட வீடு தீப்பிடிந்தது. அந்த வீடு தற்போதும் சிவபுரத்தில் உள்ளது.


பரிகாரப் பலன்
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இத்தல அம்பிகைக்கு அபிஷேக ஆராதனை
செய்து விருதமிருந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை புரிய குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். குழந்தைகளுக்கு எற்படக்குடிய தோஷங்கள் உடல் உபாதைகள் இத்தல அம்பிகையை வழிபட நீங்கும். தீராத வழக்குகள் ஏமாற்றப்படுதல் தகராறு போன்றவை விழகி வெற்றி கிடைத்து நிம்மதியுடன் வாழ விழைவோர் இத்தலக்கோவிலில் உள்ள பைரவருக்கு கலை சந்திகாலத்திலோ (8.30மணி) அல்லது இரவு அர்த்த சாமத்திலோ (மணி7.30வடி8.30வரை) அபிஷேகம் செய்து வடமாலை சார்த்தி தயிர்சாதம் கடலை உருண்டை நிவேத்யம் செய்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்ய நினைத்த காரியம் வெற்றிபெறும்.

ஆதி சங்கரருடைய பிதாவாக சிவகுரு தலம் செய்த திருச்சூரை நம்பூதிரிகள் சிவபுரம் என்று அழைக்கிறார்கள். சிவபுரம் என்ற பெயரே திருச்சிவ பேரூர் என்றாகி திருச்சூர் என்று மருவி வந்திருக்கிறது. ஒரு நட்டவர் மற்றைய நாட்டுக்கு குடிபெயரும் போது பழைய நாட்டிலுள்ள பெயர்களையே புது நாட்டில் ஏற்படும் ஊர்களுக்கு வைப்பதைப் பார்த்திருக்கிறோம். மலையாளத்திலுள்ள சிவாலயங்களில் மிகவும் முக்கியமூம் பெரிதும் ஊருக்கு நடுநாயமாகவும் விளங்குவது திருச்சூர் என்னும் சிவபுரத்தின் ஆல்யம்.

கும்பகோணம் மகாக்ஷேத்திரம்
( ஸ்ரீ காட்சி காமகோடி மடத்திலிருந்து அருளிச் செய்யப்பட்டது)


அருள்மிகு கௌதமேசர்

இறைவன் : அருள்மிகு கௌதமேசர்

இறைவி : அருள்மிகு சௌந்தநாயகி

தலவிருட்சம் : வில்வம்

ஊழிக்கால பெருவெள்ளத்தில் மிதந்து வந்த தங்கிய அமுத குடத்தை வேட உருவத்தில் தோன்றிய சிவபெருமான் அம்பால் சிதைத்தபோது கும்பத்தில் மேலிருந்த பூணூல் (உபவீதம்) ஓரிடத்தில் வழுந்தது ஒரு சிவலிங்கமாக தோன்றியது. அதுவே கௌதமேசர் கோவில் பூணூல் யக்ஞோபவீதம். எனவே யக்ஞோபவீதேசர் எனப் பெயர் கொண்டார் இறைவன். அம்பாள்
சௌந்தரநாயகி ஆவாள்.


திரேதாயுகத்தில் கௌதமர் என்ற முனிவர் இருந்தார். இவரும் இவர் மனைவியும் சிவனிடம் நீங்காது பக்தி கொண்டு சிவனருள் பெற்று வாழ்ந்துவந்தனர். கௌதமர் வேதாசாரமாகிய விபூதியையும், முறைப்படி உருத்திராச்சங்களையும் அணிந்து பஞ்வாகூரத்தை செபித்து வந்தார். அதோடு மட்டுமல்லாது தம்மை நாடி வருவோர் அனைவருக்கும் இத்தம்பதியினர் வயிறு நிறைய மனம் குளிரும்படி அன்னமிட்டு அகமகிழ்ந்து வந்தனர்.


இவ்வாறு வாழ்ந்து வரும் காலத்தில் தல யாத்திரை செய்யும் பொருட்டு பல்வேறு தலங்களுக்கும் சென்று அத்தலங்களில் அந்தணருக்கு அன்னமிட்டு மகிழ்ந்தனர். எவ்வாறெனில் கௌதமர் தம் தவ வலிமையால் தாம் செல்லும் இடங்களில் உள்ள வயல்களில் அரிசியாகவே செய்து வந்தனர்.

இவ்வாறு அவர்கள் சீர்காழி வந்தபோது அங்கு கௌதம தம்பதியருக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. ஆதாவது சீர்காழிக்கு அவர்கள் வந்தபோது துவாதச வருஷம். கடுமையான பஞ்சம், சிரிது நீர் உற்றினாலும் நிலம் உரிஞ்சிவிடும். ஏங்கும் பசுமையின்றி பாலை போன்ற கடும் வறட்சி.


ஆயினும் தவ வலிமைக் கொண்ட கௌதமர் அமைத்த ஆசிரமத்தில் மட்டும் அதிசயம். அறுசுவை உணவுடன் அனைவருக்கும் உணவு வழங்கி வந்தார்.


இதன் இரகசியம் கேட்டனர் சில பாதகர். காரணம் அதை தம் இருப்பிடத்திற்கு கொண்டு போவதற்காக. கௌதமர் புன்னைகையுடன் மறுக்க அப்பாதகர் மந்திர வழிமையால் உடல் இளைத்த ஒரு பசுவை உண்டாக்கி அதை கௌதமர் முன் விட்டனர். அப்பசுவைக் கண்ட கௌதமர் மனமிரங்கி 'ஐயொ பாவம்,வநச்சியால் உடல் வற்றிவிட்டதே' என தம் தவ வலிமையால் சக்தியளிக்க எண்ணி கையால் மெல்ல தடவினார். உடனே அந்த பசு கீழே விழுந்து உயிர் துறந்தது.


கூடியிருந்தோர் பசுவை கொன்று விட்டீரெ எனக் கூறி ஓடி விட்டனர். கௌதமர் கலங்காது கண்மூடி ஞான திருஷ்டியால் 'என்ன காரணம்?' என்று பார்க்க இது பாதகர் செய்த மோசம் என உணர்ந்து பாதகரை சபித்து விட்டு மாயூரம் நோக்கி நகர்ந்தார். மாயூரநாதரை அடைந்து துஷ்டருடன் சேர்ந்திருந்த தோஷத்தையும் மாயபசுலைக் வதைத்த தோஷத்தையும் நீக்க வேண்டினார்.


இப்போது துர்வச முனிவர் பாவங்களையெல்லாம் போக்கும் புண்ணிய ஸ்தலமாம் கும்பகோணம் சென்று காவேரியில் நீராடி மகாமக குளத்தின் தென்மேற்கில் வீற்றிருக்கும் யக்ஙோபவீதரை வணங்கி பூசித்து வேண்டினால் பாவமெல்லாம் பறந்துவிடும் என்று கூறினார்.


அதன்படியே கௌதமரும் கும்பகோணம் வந்து யக்ஙோபவீதேசரை பூசித்து வணங்கி பாவவீமோசனம் அடைந்தார். அதுமுதல் இத்தலமூர்த்தி கௌதமேசர் என வழங்கப்படுகிறார்.

பாவவீமேசனம் தரும் கௌதமேசர் கோவில் மகாமகக் குளக்கரையில் சிறிது தென் மேற்கே சென்றால் உள்ளடங்கியுள்ளது.

சக்கரபாணி கோயில்

மூலவர் : அருள்மிகு சக்கரபாணி

தாயர் : சுதர்சனவள்ளி, விஜயவள்ளி

தீர்த்தம் : சூரிய புஷ்கரணி


ஒருகாலத்தில் சூரியன் தன்னைக்காட்டிலும் ஒளியில் சிறந்தவன் யாரும் இல்லை கர்வம் கொண்டு தன்னுடைய ஒளிக்கதிர்களால் உலகத்தை தாக்க அந்த ஒளியை தாங்க மாட்டமல் ஜீவராசிகள் அனைதும் தவிக்கலாயின். அப்பொழுது பிரம்மாதி தேவர்கள் அனைவரும் வைகுண்டத்தில் பகவானிடம் சென்று முரையிட அவர் தன்னுடைய சக்கரத்தின் வாயிலாக இதற்கு வழி செய்வதாகவும் அதன் பொருட்டு ஒரு அஸ்வமேத யாகம் கும்பகோணத்தில் செய்யும்படி பிரம்மாவிற்கு ஆணையிட்டார்.

அதன்படி பிரம்மா இக்க்ஷேத்திரத்தில் அஸ்வமேதயாகம் செய்து அதனை பூர்த்தி செய்யும்பொருட்டு காவேரிக் கரையில் அவபிரதம் என்னும் தீர்த்ததவாரியை செய்து முடிக்க காலத்தில் அவர் கையில் பகவானின் சக்ரமானது வந்து அமர்ந்தது. அதனை அவர் அந்த கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜீத்தார். அதிலிருந்து ஒரு பெரிய ஒளி கிளம்பி சூரியனுடைய ஒளியனைத்தையும் அபகரித்தது.


உலகம் இருளில் மூல்கியது. தேவர்கள் அனைவரும் பிரம்மா முதற்கொண்டு சக்கரத்திடம் தோத்திரம் செய்ய அப்பொழுது அந்த்ச் சக்கரத்திடம் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் அனைவரும் சேர்த்து திரிமூர்த்தி சொருபமாக அஷ்ட ஆயிரம் திரினேத்டிரம் அக்னிமயமான கேசத்துடன் பகவான் அந்தச் சக்கரத்திலிருந்து தோன்றினார். தேவர்கல் வழிபட்டு திரும்பவும் சூரியனுக்கு மீண்டும் ஒளியைக் கொடுத்து


உலகத்தைக் காக்கும்படி வேண்டினார். சுரிய பகவானிடம் கர்வம் நீங்கியவனாக வணங்கி தன் ஒளியை பெற்று உலகத்தை ரட்சித்து அருளினார். சூரியன் அந்த சமயம் பகவானிடம் தன்னுடைய பெயருடன் இந்த ஊர் விளங்க வேண்டும் என்று பிரார்த்திக்க அதபடி பகவானுடன் அருளினார். அதன்னாலேயே இந்த ஊருக்கு பாஸ்கரத் என்று பெயர் விளங்கலாயிற்று. உலகிலேயே சுதர்ஸன மூர்த்திக்காக தனி கோயில் இந்தக் கோயில்தான். இங்குதான் சுதர்சஸன வள்ளி விஜயவள்ளி என்ற இரண்டு தேவிமார்களுடன் சக்கரத்தாழ்வார் அருள்பாலிக்கிறார்.


சிறப்புச்செய்தி

கும்பகோணம் அருள்மிகு சக்கரபாணித் திருகோயில் முதலாம் சரபோசி மன்னர் காலத்தில் நல்ல ஆக்கம் பெற்றுத் திகழ்ந்தது. திருமாலைச் சக்கரத்தாழ்வாராக வழிபடுவது மராத்தியர், மரபு, த்ஞ்சை இராசகோபால கோயில் மராத்தியர்கள் காலத்தில் சக்கரத்தாழ்வார் கோயிலாக மாற்றப்பட்டது என்பதை தஞ்சைபுரீஸ்வரர் கோயில் மண்டபத்துக் கல்வெட்டுகள் கூறுகின்றன. முதலாம் சரபோசி சாக்கோட்டையில் தங்கியிறுந்தபோது இக்கோயில் ஏற்றம் பெற்றது.


இத்திருகோய்ல் மகா மண்டபத்தில் சுமார் 6 அடி உயரம் உடைய சரபோசி மன்னரின் பித்தளை படிமம் ஒன்று ஊள்ளது. இதனருகே சும்மர் 8 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் காணப்படுகிறது. மராத்ட்தியர் பாணித் தலைப்பாகை நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்தியர் பாணித் தலைப்பாகை நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்திய அரச உடை தரித்து வலக்கையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் நின்ற கோலத்தில் காண்ப்படுகிறார். மீசை மெலிந்து காண்ப்படுகிறது. அருகிலுள்ள பெண் இவரது மகளாக இருக்க வாய்ப்புள்ளது. இப்படிமம் மராத்தியர் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment