கல்லணை, இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அற்புதம். மாமன்னன் கரிகால் பெருவளத்தான் தமிழகத்திற்குத் தந்த கொடை. தொன்மை வாய்ந்த இவ்வணை, இன்றளவிலும் பாசனத்திற்குத் துணைபுரிகிறது. பட்டினப்பாலை , பொருநர் ஆற்றுப்படைப் பாடல்கள் கரிகாலனின் கல்லணைச் சிறப்புகளைப் பேசுகின்றன.
மணலால் அடித்தளம் அமைக்கப்பெற்றுக் கட்டப்பட்ட கல்லணை, இன்றைய தொழில்நுட்பங்கள் யாவற்றுக்கும் முன்னோடி. 1900 ஆண்டுகளாய்க் காவிரியைக் கட்டுப்படுத்தி வரும் கல்லணைக்கான கட்டுமானப் பொருட்களாவன: கல், களிமண்!
சர்.ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர், கல்லணையை மகத்தான அணை என்றழைத்தார். கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம், 40 முதல் 60 அடி. ஆழம், 15 முதல் 18 அடி. 1839 ஆம் ஆண்டு, அணையின் மீது பாலம் கட்டப்பட்டது.
கரிகால் சோழன்:
இளஞ்செட்சென்னியின் வாரிசு. இளம்வயதில் ஏற்பட்ட தீக்காயத்தினால், கரிகாலன் என்றழைக்கப்பட்டான். (யானைகளின் எமன் என்றும் இப்பெயருக்கு விளக்கம் தரப்படுகிறது.) திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்ற பட்டப்பெயர்களும் உண்டு. சிறந்த வீரன். இமயம் வரை சென்றுவந்த மன்னன். அனைத்திற்கும் மேலாய் நமக்குக் கல்லணை தந்த மாமனிதன். வாழ்க மன்னன் புகழ்!
உலக அதிசயங்களில் நமக்குள் மாற்றுக் கருத்து உண்டு. கல்லணை தமிழக அதிசயம் என்றால், எவரும் முரண்படார்!
0 comments:
Post a Comment