மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Sunday, December 26, 2010

தியாகி சுரேந்திர மோகனுக்கு புகழாரம்

சுதந்திரப் போராட்ட தியாகியும், சோஷலிஸ்ட் ஜனதா கட்சியின் தேசியத் தலைவருமான மறைந்த சுரேந்திர மோகனுக்கு தியாகி ஜி.ஏ. வடிவேலு உள்பட பலர் புகழாரம் சூட்டினர். டாக்டர் லோகியா சிந்தனை மன்றம் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.ஐ.ஏ. அரங்கில் தியாகி சுரேந்திர மோகன் படதிறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. படத்தை திறந்துவைத்த தியாகி ஜி.ஏ. வடிவேலு பேசியது: நேர்மை, சக்தி ஆகியன ஒருசேர இருப்பதே சோஷலிஸ்ட். அந்த வகையில் நான் ஒரு சோஷலிஸ்ட்வாதி என்று மகாத்மா காந்தியடிகள் கூறியுள்ளார். அந்தக் கொள்கையை பின்பற்றி வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்தவர்தான் தியாகி சுரேந்திர மோகன். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். மத்திய அரசு அவசரநிலை பிரகடனம் அறிவித்த போது அதை எதிர்த்து மொராஜி தேசாயுடன் இணைந்து போ ராட்டங்களில் ஈடுபட்டார்.இந்திரா காந்தியை எதிர்த்து ஜனதா கட்சி உருவானது. 1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனதா கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை சுரேந்திர மோகன் தயாரித்தார். அந்த தேர்தலில் ஜனாத கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது, தன்னைத் தேடி வந்த, அமைச்சர் பதவி வேண்டாம் என்று சுரேந்திர மோகன் உதறினார். கல்வி வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட மண்டல் கமிஷனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முழு வீச்சில் பணியாற்றினார். அவரது முயற்சியால்தான் வி.பி. சிங் ஆட்சி காலத்தில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.அனைவராலும் மதிக்கப்பட்ட சுரேந்திர மோகன் டிசம்பர் 17-ம் தேதி மறைந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் இந்த படத் திறப்பு நிகழ்சி நடந்துள்ளது என்று வடிவேலு கூறினார்.

0 comments:

Post a Comment